Images
  • SCDF Injuries
    (படம்: Aqil Haziq Mahmud/ CNA)

துன்புறுத்தப்பட்டு மாண்ட தேசியச் சேவையாளருக்குத் தலை, உடலில் காயங்கள்


கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்டு மாண்ட முழுநேர தேசியச் சேவையாளர் கொக் யுவென் சின்னின் (Kok Yuen Chin) தலையிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக துவாஸ் வியூ (Tuas View) தீயணைப்பு நிலையத்தின் தடயவியல் நிபுணர் இன்று நீதிமன்றத்தில் கூறினார்.

அவரது நுரையீரலில் தாவரப் பொருள் ஒன்றும், மூளையில் வீக்கமும் ஏற்பட்டிருந்ததாக டாக்டர் ஜியார்ச் பால் (George Paul) கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் 14ஆம் தேதியன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதற்கு முதல் நாள் 22 வயது கார்ப்பரல் கொக் (Corporal Kok) கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்டு மாண்டார்.

கார்ப்பரல் கொக்கின் தலைக்குப் பின்னால் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், கைகள், கைவிரல்கள், கால்விரல்கள், கணுக்கால் ஆகியவற்றில் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்ட 36 நிமிடங்களுக்குப் பிறகு கார்ப்பரல் கொக்கின் உடல் அந்தக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

தண்ணீரில் மூழ்கி உயிர்வாயுவைச் சுவாசிக்க முடியாமல் போனதால் அவர் மாண்டாதாக டாக்டர் பால் கூறினார்.

Top