Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசியச் சேவையாளர் கிணற்றில் விழுந்து மாண்ட சம்பவத்தில் தொடர்புடைய குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்குச் சிறை

 தேசியச் சேவையாளர் கிணற்றில் விழுந்து மாண்ட சம்பவத்தில் தொடர்புடைய குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்குச் சிறை

வாசிப்புநேரம் -

முழுநேர தேசியச் சேவையாளரைக் கிணற்றில் தள்ளிய சம்பவத்தில் தொடர்புடைய சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இருவருக்கு இன்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு மே மாதம் துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் 12 மீட்டர் ஆழத்தில் இருந்த கிணற்றுக்குள் 22 வயதுத் தேசியச் சேவையாளர் கோக் யுவென் சின் (Kok Yuen Chin) தள்ளிவிடப்பட்டார்.

அதில் கோக் மாண்டார்.

அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கென்னத் சாங் சீ பூன் (Kenneth Chong Chee Boon), நசான் முகமது நாசி (Nazhan Mohamed Nazi) ஆகியோருக்கு 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இருவரும் கோக் இறப்பதைத் தவிர்க்க உதவியிருக்கலாம்... ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோக்கின் தந்தை மனம் வருந்தினார்.

அதிகாரிகளின் கவனக்குறைவால்
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சம்பவம் நடந்தால், அவர்களுக்கு மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ, 1500 வெள்ளி அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

முதலாம் வாரண்ட் அதிகாரி முகமது ஃபாரிட் முகமது சாலே (Mohamed Farid Mohd Saleh), ஸ்டாஃப் சார்ஜண்ட் முகமது நூர் ஃபட்வா மஹ்மூத்தைத் (Muhammad Nur Fatwa Mahmood) தூண்டிவிட்டு கோக்கை கிணற்றில் தள்ளிவிட்டார்.

ஃபாரிட்டுக்கு 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நூர் ஃபட்வா மஹ்மூத்திற்கு ஓராண்டு 4 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தடயங்களை அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்டாஃப் சார்ஜண்ட் அடிகாசலி சுஹைமிக்கு (Adighazali Suhaimi) ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்