Images
  • SCDF Sound (1)
    (படம்:  Twitter / SCDF) 

குடிமைத் தற்காப்புப் படையின் பொது எச்சரிக்கை சங்கொலி வியாழக்கிழமை மாலை 6.20 மணிக்கு

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் பொது எச்சரிக்கை முறை தீவு முழுதும் வியாழக்கிழமை (15 பிப்ரவரி) மாலை 6.20 மணிக்கு ஒலிக்கவிருக்கிறது.

முழுமைத் தற்காப்பு தினத்தை முன்னிட்டு அந்த ஒலி எழுப்பப்படும்.

1 நிமிடத்துக்கு நீடிக்கும் அந்த ஒலியைக் கேட்டு பீதியடைய வேண்டாம் என்று குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்தியைக் குறிக்கும் அந்த ஒலி, SGSecure செயலி இருக்கும் அனைத்துத் திறன்பேசிகளிலும் ஒலிக்கும் என்றும் அது தெரிவித்தது.

1942இல் பிரிட்டிஷார், ஜப்பானியர்களிடம் சரணடைந்த நேரத்தைக் குறிக்கும் வகையில் 15 பிப்ரவரி மாலை 6.20 மணிக்கு பொது எச்சரிக்கை முறை ஒலிக்கப்படுகிறது.

அது பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் இணையப்பக்கத்தை நாடலாம்.


 

உங்கள் கருத்து

Top