Images
  • scdf
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

நாளை முக்கியத் தகவலுக்கான ஒலி எழுப்பப்படும் : குடிமைத் தற்காப்புப் படை

குடிமைத் தற்காப்புப் படை, நாளை மாலை பொது எச்சரிக்கை முறையின் மூலம், முக்கியத் தகவலுக்கான ஒலியை எழுப்பவிருக்கிறது.

மாலை மணி 6.20க்கு தீவு முழுவதும் எழுப்பப்படும் அந்த ஒலி ஒரு நிமிடம் நீடிக்கும்.

பொது மக்கள் அதைக் கேட்டு பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முக்கியத் தகவலுக்கான ஒலி, SGSecure செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள திறன்பேசிகள் அனைத்திலும், ஒலிக்கும். திறன்பேசிகளின் ஒலியளவு முற்றிலும் குறைக்கப்பட்டிருந்தால் அதனைக் கேட்க முடியாது.

பொது எச்சரிக்கை முறையின் கீழ், பொதுமக்களுக்கு சமிக்ஞைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் குடிமைத் தற்காப்புப் படை அந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.

அதுகுறித்த மேல்விவரங்களைக் குடிமைத் தற்காப்புப் படையின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  

Top