Images
  • SCDF
    கோப்புப் படம்: Channel NewsAsia 

நாளை மறுநாள் பொது எச்சரிக்கை முறை ஒலி எழுப்பப்படும்: குடிமைத் தற்காப்புப் படை

முழுமைத் தற்காப்பு தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை நாளை மறுநாள் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை முறையின் கீழ் எச்சரிக்கை ஒலியை எழுப்பவிருக்கிறது.

மாலை 6.20 மணியளவில், குடிமைத் தற்காப்புப் படையின், "முக்கிய தகவல்" சமிக்ஞை ஒலி ஒரு நிமிடத்திற்கு எழுப்பப்படும்.

சமிக்ஞையைக் கேட்டவுடன், உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களின் ஒலி-ஒளிபரப்பை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பொது எச்சரிக்கை முறை குறித்த தகவல் அதில் இடம்பெறும்.

குடிமைத் தற்காப்புப் படையின் சமிக்ஞை ஒலியை, SGSecure செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள திறன்பேசிகளின் வாயிலாகவும் கேட்க முடியும்.

சிங்கப்பூரில், 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் மாலை மணி 6.20க்கு, பிரிட்டிஷார், ஜப்பானியப் படைகளிடம் சரணடைந்தனர். அதனைக் குறிக்கும் விதமாக நாளை மறுநாள் மாலை 6.20க்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்.


Top