Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வதைச் செயல் காணொளிகள் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சேனல் நியூஸ்ஏஷியாவால், அதன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு வதைச் செயல் காணொளிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.

வாசிப்புநேரம் -
வதைச் செயல் காணொளிகள் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை

படம்: Channel NewsAsia

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சேனல் நியூஸ்ஏஷியாவால், அதன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு வதைச் செயல் காணொளிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.

அண்மையில் இடம்பெற்ற வதைச் சம்பவத்தில், நீரேற்றக் கிணறு ஒன்றில் இறக்கிவிடப்பட்ட முழு நேரத் தேசியச் சேவையாளர் கொக் யுவென் சின் மாண்டார். அதனைத் தொடர்ந்து அந்த இரண்டு காணொளிகள் பார்வைக்கு வந்துள்ளன.

முதல் காணொளியில், குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் தரையில் இழுத்துச் செல்லப்படும் காட்சி பதிவாகியுள்ளது.

இரண்டாவது காணொளியில், அதே அதிகாரி நீர் நிறைந்த கிணற்றில் திணறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

வதைச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை நேற்று(மே 23) அறிவித்தது.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்