Images
  • yish
    (படம்: Telegram/SGRoad Blocks/Traffic News )

மேம்பாலக் கூரையின் மீது நடந்த பெண்ணைக் காப்பாற்றிய குடிமைத் தற்காப்புப் படையினர்

யீஷூனில் மேம்பாலக் கூரையின் மீது நடந்த பெண்ணைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். அதனால் யீஷூன் அவென்யூ 2-இல் மதிய நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்த காணொளிகளும் நிறழ்படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தப் பெண் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருந்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து மாலை 5 மணியளவில் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தற்கொலை முயற்சிக்காக அப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 

உங்கள் கருத்து

Top