Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த ஆண்டு பள்ளி விடுமுறை நாட்கள்

சிங்கப்பூர் கல்வி அமைச்சு 2019க்கான பள்ளி விடுமுறை நாள் பட்டியலை இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் கல்வி அமைச்சு 2019க்கான பள்ளி விடுமுறை நாள் பட்டியலை இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் கல்வி ஆண்டு நவம்பர் 15 முடிவடையும்.

தொடக்கக் கல்லூரிகள், மில்லெனியா கல்வி நிலையம் முதல் ஆண்டு மாணவர்கள் பிப்ரவரி 1 அன்று பள்ளி ஆண்டைத் தொடங்குவர், மற்ற மாணவர்கள் ஜனவரி 7ஆம் தேதி பள்ளியைத் தொடங்குவர்.

தொடக்கப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி:

தவணை 1 விடுமுறை: மார்ச் 16 - மார்ச் 24

தவணை 2 விடுமுறை: ஜூன் 1 - ஜூன் 30

தவணை 3 விடுமுறை: செப்டம்பர் 7 - செப்டம்பர் 15

தவணை 4 விடுமுறை: நவம்பர் 16 - டிசம்பர் 31

தொடக்கக்கல்லூரி, மில்லெனியா கல்வி நிலையம்:

தவணை 1 விடுமுறை: மார்ச் 16 - மார்ச் 24

தவணை 2 விடுமுறை: ஜூன் 1 - ஜூன் 30

தவணை 3 விடுமுறை: செப்டம்பர் 7 - செப்டம்பர் 15

தவணை 4 விடுமுறை: நவம்பர் 23 - டிசம்பர் 31/ 'A' நிலைத் தேர்வுகள் முடியும் இறுதி நாள் - 31 டிசம்பர்

பள்ளிகளில் அனுசரிக்கப்படும் இளையர் தினம் ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் மறுநாள் ஜூலை 8ஆம் தேதி பள்ளி விடுமுறையாக அனுசரிக்கப்படும்.

அடுத்த ஆண்டு ஆசிரியர் தினம் செப்டம்பர் 6 அன்றும் சிறுவர் தினம் அக்டோபர் 4 அன்றும் கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு அவ்விரு நாட்களும் பள்ளி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்