Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்று பள்ளிகளில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டங்கள்...அனுபவத்தைப் பகிரும் மாணவர்

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் இன்று தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருமிப்பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கொண்டாட்டம் அமைந்தது.

வாசிப்புநேரம் -
இன்று பள்ளிகளில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டங்கள்...அனுபவத்தைப் பகிரும் மாணவர்

(படங்கள்: ஷரளா தேவி)

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் இன்று தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருமிப்பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கொண்டாட்டம் அமைந்தது.

மாணவர்கள், தங்கள் வகுப்புகளில் இருந்தவாறே தேசிய கீதம் பாடி, பற்றுறுதி எடுத்துக்கொண்டனர். Zoom செயலி வழியே, தேசிய தினத்திற்கே உரிய 'Recollections' அங்கமும் இடம்பெற்றது. அந்த வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார், Bendemeer உயர்நிலைப் பள்ளி மாணவர் ரமேஷ் ஸ்ரீநிதி.

கொண்டாட்டங்கள் சென்ற ஆண்டுபோல் இல்லை. இருப்பினும், பள்ளி நிறைய முயற்சி எடுத்துக் கொண்டாட்டங்களை அமைத்துள்ளது. அவற்றில் கலந்துகொள்வதில் எனக்குச் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் உள்ளது

என்று ரமேஷ் ஸ்ரீநிதி கூறினார்.

முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருக்கலாம். ஆனால், தேசிய உணர்வு குறையவில்லை. நாம் விடாமுயற்சியுடன் கிருமித்தொற்றை முறியடித்து, தடைகளை மீறி, முன்னேறுவோம் என்பதை இந்தக் கொண்டாட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன

என்று நம்பிக்கையோடு தெரிவித்தார் ரமேஷ் ஸ்ரீநிதி.

(கிரீன்ரிஜ் தொடக்கப்பள்ளியிலும் தேசிய தினக் கொண்டாட்டங்கள்.)

மாணவர்களிடம் தேசிய தின உணர்வை மேலோங்கச் செய்யும் வகையிலும் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்