Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாய்மொழி ஆதரவுப் பாடத்திட்ட சோதனை முறை பலனளித்ததாகப் பள்ளிகள் கருத்து

தாய்மொழி ஆதரவுப் பாடத்திட்டத்தைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ள பள்ளிகள், அத்திட்டம் நன்மையளிப்பதாகக் கூறியுள்ளன.  

வாசிப்புநேரம் -

தாய்மொழி ஆதரவுப் பாடத்திட்டத்தைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ள பள்ளிகள், அத்திட்டம் நன்மையளிப்பதாகக் கூறியுள்ளன.

தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் 2021ல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அந்தத் திட்டம் இருவழித் தொடர்புக் கற்றல் முறையை வலியுறுத்தும்.

சென்ற ஆண்டு, முன்னோடிப் பாடத்திட்டத்தைச் செயற்படுத்திய 24 பள்ளிகளில் ஹுவாமின் தொடக்கப்பள்ளியும் ஒன்று.

வாரத்தில் இரண்டு முறை தாய்மொழி ஆதரவுப் பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.

ஆதரவுத் திட்டத்தின் மூலம், கொடுக்கப்பட்ட பயிற்சிக் கருவிகள் அனைத்துமே மாணவர்களுடைய நிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் பள்ளியின் தமிழாசிரியர் ஹேமலதா.

தமிழ்மொழியை உற்சாகத்துடன் புதுமையான முறையில் கற்றுக்கொள்ளப் பல நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

அந்தப் பாடத்திட்டத்தை முழுமையாகச் செயற்படுத்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிபுணத்துவப் பயிற்சியைப் படிப்படியாக வழங்கவிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்மொழி ஆதரவுப் பாடத்திட்டம் தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு 2022ல் அறிமுகப்படுத்தப்படும்.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்