Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வூஹான் கிருமித்தொற்று - பெற்றோர் பிள்ளைகளின் பயண விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் வூஹான் கிருமித்தொற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

வாசிப்புநேரம் -
வூஹான் கிருமித்தொற்று - பெற்றோர் பிள்ளைகளின் பயண விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்

(படம்: TODAY)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் வூஹான் கிருமித்தொற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளைகளின் பயண விவரங்களைப் பெற்றோர் தெரிவிக்கவேண்டும்.

Parents Gateway செயலியின்மூலம் அந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்டது. நாளை முதல் இம்மாதம் 28 தேதி வரை வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளைகளின் விவரங்களைப் பள்ளிகள் சேகரித்துவைக்கும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்