Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாளை மறுநாள் முதல், அத்தியாவசியமற்ற கல்வித் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிக நிறுத்தம்

சிங்கப்பூரில் 2ஆம் கட்ட அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலைக்கு ஏற்ப, பள்ளிகளில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 2ஆம் கட்ட அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலைக்கு ஏற்ப, பள்ளிகளில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் முதல், நேரடி இணைப்பாட நடவடிக்கைகள், அத்தியாவசியம் அல்லாத கல்வித் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

வெளியிடங்களுக்குச் செல்லத் தேவைப்படும் இணைப்பாட நடவடிக்கைகளும் கற்றல் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மாணவர்கள், வெளிப்புறங்களில் அல்லது நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணியாமல் தனித்தனியாக உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

குழு நடவடிக்கைகள் நடத்தப்படமாட்டா.

முகக்கவசத்தை அகற்றத் தேவைப்படும் இசை, நாடக வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இறுதியாண்டில் பயிலாத மாணவர்களுக்கு, நிலையம் சார்ந்த வகுப்புகள் இணையம்வழி நடத்தப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்