Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மேலும் பல பள்ளிகள் இணைக்கப்படுகின்றன- 18 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் 9 பள்ளிகளாக இணையும்

சிங்கப்பூரில் 18 தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் இணைக்கப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மேலும் பல பள்ளிகள் இணைக்கப்படுகின்றன- 18 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் 9 பள்ளிகளாக இணையும்

(படம்: Google Street View)

சிங்கப்பூரில் 18 தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் இணைக்கப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தாலும், குடியிருப்புப் பேட்டைகளில் மக்கள் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாலும், பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

அதே வேளையில் சில பகுதிகளில் பள்ளி இடங்களுக்கான தேவை உயர்ந்திருப்பதாகக் கல்வி அமைச்சின் பள்ளிகளுக்கான இயக்குநர் லியூ வெய் லீ (Liew Wei Li) கூறினார்.

இணைக்கப்படவுள்ள தொடக்கப் பள்ளிகள்:

  • ஜூயிங் (Juying) தொடக்கப்பள்ளியுடன் பயனியர் (Pioneer) தொடக்கப்பள்ளி
  • யூனோஸ் (Eunos) தொடக்கப்பள்ளியுடன் தெலோக் குராவ் (Telok Kurau) தொடக்கப்பள்ளி
  • ஃபேரர் பார்க் (Farrer Park) தொடக்கப்பள்ளியுடன் ஸ்டாம்ஃபர்ட் (Stamford) தொடக்கப்பள்ளி
  • குவாங்யாங் (Guangyang) தொடக்கப்பள்ளியுடன் டவுன்ஸ்வில் (Townsville) தொடக்கப்பள்ளி

இணைக்கப்படவுள்ள உயர்நிலைப் பள்ளிகள்:

  • பிடோக் கிரீன் (Bedok Green) உயர்நிலைப் பள்ளியுடன் பிங் யி(Ping Yi) உயர்நிலைப் பள்ளி
  • சுவா சு காங் (Chua Chu Kang) உயர்நிலைப் பள்ளியுடன் டெக் வாய் (Teck Whye) உயர்நிலைப் பள்ளி
  • ஃபாஜார் (Fajar) உயர்நிலைப் பள்ளியுடன் கிரீன்ரிட்ஜ் (Greenridge) உயர்நிலைப் பள்ளி
  • நியூ டவுன் (New Town) உயர்நிலைப் பள்ளியுடன் தங்ளின் (Tanglin) உயர்நிலைப் பள்ளி
  • ஃபூச்சுன் (Fuchun) உயர்நிலைப் பள்ளியுடன் உட்லண்ட்ஸ் ரிங் (Woodlands Ring) உயர்நிலைப் பள்ளி

இணைக்கப்பட்ட பள்ளிகளின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்