Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய அறிவியல் நிலையம் 2025ஆம் ஆண்டுவாக்கில் கட்டி முடிக்கப்படும்

சிங்கப்பூரின் புதிய அறிவியல் நிலையம் 2025ஆம் ஆண்டுவாக்கில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
புதிய அறிவியல் நிலையம் 2025ஆம் ஆண்டுவாக்கில் கட்டி முடிக்கப்படும்

(படம்: CNA)


சிங்கப்பூரின் புதிய அறிவியல் நிலையம் 2025ஆம் ஆண்டுவாக்கில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு ஆய்வுக்கூடங்கள், வெளிப்புற நடவடிக்கைத் திட்டங்கள் என மேம்பட்ட வசதிகளை அது கொண்டிருக்கும்.

புதிய நிலையத்தை, Architects 61 நிறுவனத் தலைமையிலான குழு வடிவமைக்கும். அதற்கான ஏலக் குத்தகை வழங்கப்பட்ட தகவலைக் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் இன்று அறிவித்தார்.

புதிய அறிவியல் நிலையம் Chinese Garden MRT நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும்.

ஜூரோங் லேக் வட்டாரத்திற்குப் பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக அது விளங்கும்.

சென் ஃபிரான்ஸிஸ்கோ, தோக்யோ (San Francisco, Tokyo) போன்ற நகரங்களில் அமைந்திருக்கும் அறிவியல் நிலையங்கள் உள்ளிட்ட நேரடி கற்றல் அனுபவ வாய்ப்புகளைத் தரும் உலகின் பல்வேறு அறிவியல் நிலையங்களைக் கருத்தில் கொண்டு நிபுணத்துவக் குழு அதனை வடிவமைக்கும் என்று அமைச்சர் கூறினார்.

புதிய நிலையம் கட்டப்படும் வேளையில், சிங்கப்பூர் அறிவியல் நிலையம் அதன் கண்காட்சிகள், திட்டங்கள் ஆகியவற்றைத் தற்போதைய இடத்தில் தொடரும்.

நிலையம் புதிய இடத்துக்கு மாறிய பிறகு, தற்போதைய இடத்தின் பயன்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்