Images
  • stan chart race
    (கோப்புப் படம்: Standard Chartered Singapore Marathon)

மெய்நிகர் அம்சங்களுடன் Standard Chartered Singapore நெடுந்தொலைவோட்டம்

Standard Chartered Singapore நெடுந்தொலைவோட்டப் பந்தயத்தில் கலந்துகொள்வோர் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்தவாறே சிங்கப்பூரின் முக்கியமான இடங்களைக் கண்டு களிக்கலாம்.

மெய்நிகர் செயலி அதற்கு வழியமைத்துக் கொடுக்கிறது.

நோய்த்தொற்றுச் சூழலால் மெய்நிகர் அம்சங்களுடன் (Augmented reality) இவ்வாண்டின் பந்தயம் நடைபெறும் என்று Ironman ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Rouvy என்ற மெய்நிகர் உடற்பயிற்சிச் செயலி மூலம் பந்தயம் நிகழும். கண்காணிப்புச் சாதனம் (tracking device) கொண்டு ஓட்ட இயந்திரத்தில் (treadmill) இருந்தபடியே போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மற்றவர்களுடன் போட்டியிடும் காட்சியை செயலியில் உடனுக்குடன் காணலாம். போட்டியிடுவோர் தங்களின் மின்னிலக்கச் சின்னத்தையும் உருவாக்கலாம்.

ஆர்ச்சர்ட் ரோடு, லிட்டில் இந்தியா போன்ற இடங்களின் காட்சிகள் செயலியில் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை இடம்பெறவிருக்கும் 10 கிலோமீட்டர், 21 கிலோமீட்டர் பந்தயங்களுக்கு இப்போதிலிருந்து இலவசமாகப் பதிவுசெய்யலாம்.

பரிந்துரைக்கப்பட்ட சுகாதார, பாதுகாப்பு அம்சங்கள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழு குறிப்பிட்டது.  

Top