Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Scoot விமானத்தில் உயிர்வாயுக் கவசங்கள் தவறுதலாகக் கீழே வந்ததற்குக் காரணம் விமானிகளின் தவறான முடிவு

சிங்கப்பூரிலிருந்து தைப்பே சென்ற Scoot விமானத்தில் உயிர்வாயுக் கவசங்கள் தவறுதலாகக் கீழே வந்ததற்கு விமானிகளின் தவறான முடிவே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Scoot விமானத்தில் உயிர்வாயுக் கவசங்கள் தவறுதலாகக் கீழே வந்ததற்குக் காரணம் விமானிகளின் தவறான முடிவு

(படம்: 8WorldNews/张福麟)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஸ்கூட் விமானம் TR996இல் நேற்று முன் தினம், அந்தச் சம்பவம் நடந்தது.

விமானம் தரையிறங்கும்போது விமானிகள் அதன் தொடர்பில் விமானிகள் சில முடிவுகளை எடுக்கவேண்டியிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனால் விமானத்தினுள் காற்றழுத்தம் சற்று மட்டுப்பட்டது.

விமானம் தொடர்ந்து பாதுகாப்பாகப் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்றபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானிகள் உயிர்வாயுக் கவசங்களைக் கீழே இறக்க முடிவெடுத்தனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ஸ்கூட் நிறுவனம், அந்த விமானிகள் மீண்டும் பயிற்சிக்கு அனுப்பப்படுவர் என்று கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்