Images
  • scoot
    (படம்: Reuters)

ஹாங்காங் ஆர்ப்பாட்டம் - ஸ்கூட் பயணிகளுக்கு முழுத் தொகையையும் திரும்பக் கொடுக்க முடிவு

ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணம் செய்யும் ஸ்கூட் பயணிகளுக்கு அவர்களின் பயணச்சீட்டிற்கான
முழுத் தொகையையும் திரும்பக் கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பயணிகள் மறு முன்பதிவு செய்யவும் அது உதவுகிறது.

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் இயக்கம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இன்று மாலையிலிருந்து அங்கு பயணப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஸ்கூட் அதன் இணையப் பக்கத்தில் ஆகஸ்ட் 12 முதல் 18 ஆம் தேதிவரை ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணம் செய்பவர்களுக்குப் பயணச்சீட்டிற்கான
முழுத் தொகையையும் திரும்பக் கொடுப்பதாக அறிவித்தது.

Top