Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஸ்கூட் விமானச் சிப்பந்தியை மானபங்கம் செய்த இந்தியப் பயணி - நான்கு மாதச் சிறைத்தண்டனையைத் தொடங்குகிறார்

ஸ்கூட் விமானச் சிப்பந்தியை மானபங்கம் செய்த இந்தியப் பயணியின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதால், நான்கு மாதச் சிறைத்தண்டனையைத் தொடங்குகிறார் அவர்.

வாசிப்புநேரம் -
ஸ்கூட் விமானச் சிப்பந்தியை மானபங்கம் செய்த இந்தியப் பயணி - நான்கு மாதச் சிறைத்தண்டனையைத் தொடங்குகிறார்

(படம்: Nuria Ling/TODAY)

ஸ்கூட் விமானச் சிப்பந்தியை மானபங்கம் செய்த இந்தியப் பயணியின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதால், நான்கு மாதச் சிறைத்தண்டனையைத் தொடங்குகிறார் அவர்.

40-வயது விஜயன் மதன் கோபால், கொச்சினிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் 22-வயது விமானச் சிப்பந்தியை மானபங்கம் செய்ததாகக் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வழக்குரைஞர்களின் ஆதாரங்களிலிருந்து விஜயன் குற்றம் செய்தது உறுதியாகத் தெரிவதால், மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதாய் நீதிபதி தெரிவித்தார்.

மோசமான சேவை வழங்கியது குறித்து புகார் செய்ததால், பாதிக்கப்பட்டவரும், அவருடன் பணியாற்றும் சிப்பந்திகளும் மானபங்கம் குறித்துப் பொய் கூறினர் என்ற விஜயனின் கூற்றை ஏற்றுக்கொள்ள எந்த ஆதாரமும் இல்லை என்றார் நீதிபதி.

விமானத்தில் ஆடவர் தகாத முறையில் நடந்துகொண்டதால், ஸ்கூட் நிறுவனத்திடமும், விமான நிலையக் காவல்துறையிடமும் சிப்பந்தி புகார் செய்தார்.

இன்று (அக்டோபர் 16) முதல் விஜயன் தம் சிறைத்தண்டனையைத் தொடங்குவார். அதற்கு முன் அவர் தம் உறவினர்களுடன் பேசுவதற்கு நீதிபதி அரைமணி நேரம் அவகாசம் அளித்துள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்