Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் சேர விண்ணப்பித்துள்ள அரசியல்வாதி பெஞ்சமின் புவீ

அரசியல்வாதியான திரு. பெஞ்சமின் புவீ (Benjamin Pwee) ஜனநாயக முற்போக்குக் கட்சியிலிருந்து பதவி விலகியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் சேர விண்ணப்பித்துள்ள அரசியல்வாதி பெஞ்சமின் புவீ

(படம்: Jason Quah/TODAY)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்


அரசியல்வாதியான திரு. பெஞ்சமின் புவீ (Benjamin Pwee) ஜனநாயக முற்போக்குக் கட்சியிலிருந்து பதவி விலகியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.

ஜனநாயக முற்போக்குக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளரான அவர், அது குறித்துத் தமது Facebookஇல் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பண்புகளிலும் இலக்குகளிலும் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கட்சியில், தம்மைப் போன்ற சிந்தனையுள்ள, தமது நம்பிக்கைக்குரிய உறுப்பினர்கள் பலர் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நீண்டகாலம் செயல்படும் கட்சி எனும் வகையில், ஜனநாயகக் கட்சியின் நிர்வாக வளங்களிலும் ஆற்றலிலும் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் திரு. புவீ குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்