Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வெற்றிக்கான வழி' எனும் கருப்பொருளில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
'வெற்றிக்கான வழி' எனும் கருப்பொருளில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை

படம்: சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி/ Facebook

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

'The Way Forward' (வெற்றிக்கான வழி) எனும் கருப்பொருளில் அதன் அறிக்கை அமைந்துள்ளது.

லாபமீட்டுவதை விட மக்கள் மீது அதிகக் கவனம் செலுத்துதல், செழிப்பைக் காட்டிலும் உரிமைகளுக்கு முன்னுரிமை, செல்வத்தை விடவும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கட்சி தெரிவித்தது.

வாழ்க்கைச் செலவினம், சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, மக்கள் தொகை, பொருளியல், கல்வி, மலாய்ச் சமூகம், அமைச்சர்களின் சம்பளம் ஆகியவை குறித்து வரையறுக்கப்பட்ட பரிந்துரைகள், சிங்கப்பூரை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லக்கூடியவை என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தெரிவித்தது.

அடுத்த ஆண்டு இறுதி வரை பொருள் சேவை வரியை ரத்துசெய்தல், ஆள்குறைப்புக் காப்புறுதித் திட்டங்களுக்குப் பணம் செலுத்துதல், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற குறைந்த வருமான மூத்தோருக்கு ஆதரவளித்தல், அனைத்திற்கும் மேலாக மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்தில், சிங்கப்பூரில் 10 மில்லியன் மக்கள் தொகை சாத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவற்றை அக்கட்சி முன்வைத்துள்ளது.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றால், நகர மன்றங்களை நிர்வகிக்கும் நடைமுறை குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கட்சி தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்