Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இணையத்தின் வழியே உயர்நிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இணையத்தின் வழியே உயர்நிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வாசிப்புநேரம் -

தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இணையத்தின் வழியே உயர்நிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதற்காக வழங்கப்படும் S1 தெரிவுப் படிவத்தின் வலப்பக்க மேல்மூலையில் அவர்களுக்குரிய தனித்துவமான அடையாள எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதைப் பயன்படுத்தி உயர்நிலைப் பள்ளிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இன்று முற்பகல் 11 மணியிலிருந்து வரும் டிசம்பர் முதல் தேதி பிற்பகல் மூன்று மணி வரை மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

கல்வியமைச்சின் www.moe.gov.sg/s1-posting எனும் இணையப் பக்கத்தில் உயர்நிலைப் பள்ளிகளின் விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்பே, மாணவர்கள் பெற்றோருடன் கலந்து பேசி உரிய பள்ளிகளைத் தெரிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

உயர்நிலைப் பள்ளிக்குத் தெரிவு செய்யப்பட்டதற்கான முடிவு டிசம்பர் 22 ஆம் தேதி மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்