Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காலியாக உள்ள முன்னாள் உயர்நிலைப் பள்ளி வளாகங்கள் இரண்டு, வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் வசதிகளாக மாற்றப்படும்

சிங்கப்பூரில் பள்ளி வளாகமாக இருந்த இரண்டு இடங்கள், ஆரோக்கியமாக உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிகத் தங்கும் வசதிகளாக மாற்றப்படவுள்ளன. 

வாசிப்புநேரம் -
காலியாக உள்ள முன்னாள் உயர்நிலைப் பள்ளி வளாகங்கள் இரண்டு, வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் வசதிகளாக மாற்றப்படும்

(படம்: Google Street View)

சிங்கப்பூரில் பள்ளி வளாகமாக இருந்த இரண்டு இடங்கள், ஆரோக்கியமாக உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிகத் தங்கும் வசதிகளாக மாற்றப்படவுள்ளன.

ஹோங் கா உயர்நிலைப் பள்ளி, பிடோக் நார்த் உயர்நிலைப் பள்ளி ஆகிய இரண்டையும் பராமரிப்பு வசதிகளாக மாற்ற, கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு இடங்களையும் நிர்வகிக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளையும் சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளையும் கொண்ட பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபட்டுள்ள ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்கள் தனியாகத் தங்கவைப்படுவர் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இம்மாதத் தொடக்கத்தில் கிஸ்மிஸ் அவென்யுவில் உள்ள நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முன்னாள் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடம், ஆரோக்கியமான ஊழியர்களுக்கான தங்கும் வசதியாக மாற்றப்பட்டது.

201 உலு பாண்டான் ரோட்டில் உள்ள முன்னாள் Nexus அனைத்துலகப் பள்ளியில் ஆரோக்கியமான ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்