Images
  • power station
    படம்: TODAY/Robin Choo

St James Power Station தாக்குதல் சம்பவம்: குண்டர் கும்பல் உறுப்பினருக்குச் சிறை, பிரம்படி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

செயிண்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டேஷன்(St James Power Station) இரவு விடுதியில் ஈராண்டுக்கு முன் குண்டர் கும்பல் தாக்குதலில் சம்பந்தப்பட்ட 24 வயது முகமது ஃபைஸல் முகமது ஜமாலுக்கு இன்று எட்டரை ஆண்டுச் சிறைத்தண்டனையும் 8 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

அந்தத் தாக்குதலில் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

பொருள்களை இடம் மாற்றும் பகுதிநேர வேலையில் உள்ள ஃபைஸல், ஒரே குண்டர் கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அதிகாலை அவர்களுக்கும் இரவு விடுதியில் இருந்த மற்ற இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

அதில் திரு. சதீஷ் குமார் மனோகரன் என்பவர் கொல்லப்பட்டார்.

அந்தச் சம்பவத்தின் தொடர்பில் மேலும் இருவருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொருவர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். 


Top