Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாக்களிப்பு நிலையங்களுக்கு நடந்தோ பொதுப் போக்குவரத்து மூலமாகவோ செல்லுமாறு காவல்துறை ஆலோசனை

வாக்காளர்கள் நடந்தோ பொதுப் போக்குவரத்து மூலமாகவோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வாக்களிப்பு நிலையங்களுக்கு நடந்தோ பொதுப் போக்குவரத்து மூலமாகவோ செல்லுமாறு காவல்துறை ஆலோசனை

கோப்புப் படம்: TODAY

சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வாக்களிப்பு தினம். வாக்காளர்கள் நடந்தோ பொதுப் போக்குவரத்து மூலமாகவோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பள்ளிகள், சமூக மன்றங்கள் ஆகியவற்றில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

மூத்தோர், உடற்குறையுள்ளோர் ஆகியோரை அங்கு இறக்கிவிடும் வாகனங்களுக்குச் சிறப்பு இடம் ஒதுக்கப்படும்.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கொண்டு வரப்படும் பைகளும் உடைமைகளும் சோதிக்கப்படும்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொதுமக்கள் சுற்றித் திரிய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்களித்த பிறகு அவர்கள் உடனடியாக நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டும்.

COVID-19 சூழலால் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்.

வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிவது கட்டாயம்.

பாதுகாப்பான இடைவெளியையும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைக் காவல்துறை அணுக்கமாகக் கண்காணிக்கும். விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்