Images
  • joint patrol
    (படம்:Ariel Lim)

ஆசியான் சந்திப்பையொட்டி சிங்கப்பூரில் பாதுகாப்புப் படை உச்ச விழிப்பு நிலையில்

சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலைச் சந்திப்பை முன்னிட்டு, பாதுகாப்புப் படையினர் உச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பர்.
கூட்டத்துக்காக 20 நாடுகளின் தலைவர்கள் சிங்கப்பூர் வருகின்றனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை, 1,600க்கும் அதிகமான துருப்புகளைக் கொண்ட கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையை வழிநடத்தும்.

வரும் திங்கள் முதல், வியாழன் வரை கூட்டம் நடைபெறும்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் இருவரும் சிங்கப்பூரில் சந்தித்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போல், இம்முறையும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Top