Images
  • cyber

கடவுச்சொல் ஊடுருவல்-தவிர்ப்பது எப்படி ?

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையப்பக்கம் ஊடுருவப்பட்டதில் 4,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (மே 17) தெரிவிக்கப்பட்டது.

அமைப்பின் இணையப்பக்கத்திற்கான கடவுச்சொல் எளிதில் ஊடுருவப்படும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் காலத்தில் கடவுச்சொல்லைப் பயன்படுத்தாதவர்கள் குறைவு.

முக்கியமான பல இணையப் பரிவர்த்தனைகளுக்கு இன்று நாம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் அவை பாதுகாப்பான கடவுச்சொற்கள்தானா?

எப்படி நமது கடவுச்சொற்களைப் பிறர் ஊடுருவ முடியாதபடி வலிமையானதாக உருவாக்குவது ?

இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் சஷிதரனிடமும் கணேஷ் நாராயணனிடமும் அதுபற்றிக் கேட்டறிந்தது 'செய்தி'.

அவர்களின் பரிந்துரை:

- பயனீட்டாளர்கள் முதலில் ஒற்றைச்சொல்லைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்தக்கூடாது. மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட தனிச்சொற்களை இடைவெளியின்றிச் சேர்த்துக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக,
ஒற்றைச் சொல்லை அடிப்படையாகக் கொண்ட கடவுச்சொல்: ApplE123
இது அவ்வளவு பாதுகாப்பில்லாத கடவுச்சொல்.
இதையே வேறுவிதமாகப் பல சொற்களைக் கொண்டு IlOveAppl31two3 என்று மாற்றி உருவாக்கலாம்.

- எழுத்துகளை எண்களாகவும், எண்களை வார்த்தைகளாகவும் எழுதலாம்.
எடுத்துக்காட்டாக, '2' என்ற எண் 'two' என்று எழுத்தால் எழுதப்படலாம்.
'E' என்ற எழுத்தை '3' என்ற எண்ணால் எழுதலாம்.

-பயனீட்டாளர்கள் சிலர் கடவுச்சொற்களை மறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் அதை வேறு இடத்தில் குறித்து வைப்பதுண்டு. அது ஆபத்தானது. ஆனாலும் மறந்துபோகும் வாய்ப்புள்ளவர்கள் அதை எப்படிப் பாதுகாப்பாது ?

கடவுச்சொல்லை நேரடியாக எழுதிவைக்காமல், உங்களுக்கு மட்டுமே புரியும்வகையில் Encryption முறையைப் பயன்படுத்திக் குறித்துவைக்கலாம்.

- பயனீட்டாளர்கள் Encryption முறையைப் பயன்படுத்திக் கடவுச்சொல்லைத் தனிப்பட்ட செயலியில் அல்லது கணினி மென்பொருளில் வைத்துக்கொள்ளலாம்.

Encryption முறை பற்றிய மேல் விவரங்களுக்கு: https://www.csa.gov.sg/gosafeonline/go-safe-for-me/homeinternetusers/why-encryption-is-important

Top