Images
ரொக்க அட்டை, Tongkat Ali போத்தல் திருட்டு - பாதுகாவல் அதிகாரிக்குச் சிறைத் தண்டனை
ரொக்க அட்டை, Tongkat Ali மருந்தைக் கொண்ட 8 போத்தல்கள் ஆகியவற்றைத் திருடிய பாதுகாவல் அதிகாரிக்கு 4 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருட்டுக்காக ஒரு குற்றச்சாட்டையும், குடியிருப்பில் திருடியதற்காக 2 குற்றச்சாட்டுகளையும் 59 வயது ஓங் சேங் போ (Ong Seng Poh) ஒப்புக்கொண்டார்.
குடியிருப்பில் திருடிய குற்றத்திற்கு ஓங்கிற்கு அதிபட்சம் 7ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
திருட்டுக் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் அவருக்கு அதிகபட்சமாக மூவாண்டுச் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.