Images
  • officer
    படம்: Try Sutrisno Foo

தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிக்குப் பாராட்டு விருது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர்க் காவல்துறைப் படையினர் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிக்குப் பாராட்டு விருது வழங்கியுள்ளனர்.

திரு. ஃபூ கோங் சுன் ஜூரோங் ஈஸ்ட்டில் அமைந்துள்ள IMM கடைத்தொகுதியில் பாதுகாப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். மார்ச் 16ஆம் தேதி, பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் இறங்கினார். அவர் அதனைத் தடுத்து நிறுத்திப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டார்.

பணிக்கு அப்பாற்பட்டு சேவை புரிந்ததால் அவருக்குச் சமூகப் பங்காளித்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பணியின்போது குற்றங்களைத் தடுத்து நிறுத்த உதவிய மூன்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அதே விருது வழங்கப்பட்டது.


Top