Images
  • seed bank (1)
    (படம்: NParks)

தாவர வகைகளைப் பாதுகாக்கும் சிங்கப்பூரின் முதல் விதை வங்கி

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

சிங்கப்பூர் அதன் முதல் விதை வங்கியைப் பூமலையில் திறந்துள்ளது.

25,000 தாவர வகைகளைப் பாதுகாக்கப் புதிய வங்கியில் வசதி இருக்கிறது.

இன்றைய நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார்.

பருவநிலை மாற்றத்தால் உள்ளூரிலும், வட்டாரத்திலும் பல தாவரங்களும், விலங்கினங்களின் வாழ்விடங்களும் அழிந்துவருகின்றன; விதைகள் இயற்கையாக ஆங்காங்கே விழுந்து வளர்வது மட்டுமே போதுமானதாக இருக்காது; அவற்றைப் பாதுகாக்க இத்தகைய முயற்சிகள் அவசியம் என்றார் அமைச்சர்.

விதை வங்கி, தாவரங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் காப்பீட்டுக்குச் சமம் என்றார் அவர்.

விதை வங்கியை அமைக்குமுன், சிங்கப்பூரில் உள்ள பல்வேறு செடி கொடிகளின் விதைகளைச் சேகரிக்கும் பணியில் இறங்கினர், தேசிய பூங்காக் கழகத்தின் ஆய்வாளர்கள்.

வெப்ப மண்டல நாடுகளில் வளரும் செடிகளின் விதைகளைப் பாதுகாக்க இதுவரை நடைமுறைகள் இல்லை; அதனால், அனைத்துலக ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

விதைகள் குறித்தும், அவற்றைப் பாதுகாக்கும் செயல்முறைகள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ள காட்சியகம் ஒன்றும் பூமலையில் அமைக்கப்பட்டுள்ளது.

விதைகளைப் பாதுகாக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் கைகொடுக்கும் திட்டம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.
 

Top