Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புவியிடங்காட்டித் தரையிறங்கு முறை தொடர்பாக சிங்கப்பூர்- மலேசிய அதிகாரிகள் விரைவில் சந்திப்பு

சிலேத்தார் விமான நிலையத்தில் புவியிடங்காட்டித் தரையிறங்கு முறை (GPS) தொடர்பாக சிங்கப்பூர்-மலேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சிலேத்தார் விமான நிலையத்தில் புவியிடங்காட்டித் தரையிறங்கு முறை (GPS) தொடர்பாக சிங்கப்பூர்-மலேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.

அப்போது, புவியிடங்காட்டித் தரையிறங்கு முறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்துப் பேசப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தெரிவித்தார்.

புதிய தரையிறங்கு முறை விரைவில் நடப்பிற்குக் கொண்டு வரப்படும் என்று திரு. காவ் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்குடன் நடத்திய
கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்