Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிலேத்தார் விமான நிலையத்திற்கு வடக்கு, தெற்குப் பக்கத் தரையிறக்கும் முறைகள் அவசியம்: சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சு

சிலேத்தார் விமான நிலையத்திற்கு வடக்கு, தெற்கு என்று இரண்டு பக்கங்களிலும் தரையிறக்கும் முறைகள் அவசியம் எனப் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிலேத்தார் விமான நிலையத்திற்கு வடக்கு, தெற்கு என்று இரண்டு பக்கங்களிலும் தரையிறக்கும் முறைகள் அவசியம் எனப் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

Instrument Landing System அல்லது சுருக்கமாக ILS எனப்படும் தரையிறக்கும் முறை குறித்து மலேசியாவின் போக்குவரத்து அமைச்சு நேற்றுக் கருத்து தெரிவித்திருந்தது.

சிலேத்தார் விமான நிலையத்தின் தெற்குப் பக்கத்தில் மட்டும் விமானத்தைத் தரையிறக்கும் முறையை நடைமுறைப்படுத்தினால் போதும் என அது கூறியிருந்தது.

அதற்கு நேற்று (டிசம்பர் 12) பதிலளித்த சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சு, தெற்கில் மட்டுமல்லாமல் வடக்குப் பக்கத்திலும் விமானத்தைத் தரையிறக்கும் முறைகள் அமைக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தியது.

காற்றை மையப்படுத்தி விமானங்கள் புறப்படுவதாகவும் இந்த வட்டாரத்தில் காற்று இரண்டு பக்கங்களும் வீசுவதாகவும் சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

ஆகையால், ஒரு பக்கத்தில் மட்டுமே விமானத்தைத் தரையிறக்கும் முறையைச் செயல்படுத்த முடியாது என்றும் அது கூறியது.

இதன் தொடர்பில் மலேசியாவுடன் நவம்பர் 29ஆம் தேதியே கலந்துரையாடல் நடத்தியதை சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சு சுட்டியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்