Images
  • Seletar
    (படம்: TODAY)

விமானப் போக்குவரத்தின் தொடர்பில் மலேசியாவுடன் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றப் பத்திரங்களை சிங்கப்பூர் வெளியிட்டுள்ளது


சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், மலேசியத் தரப்புடன் நடத்திய கருத்துப் பரிமாற்ற விவரங்களை சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சு நேற்றிரவு (டிசம்பர் 5) வெளியிட்டுள்ளது.

விமானப் போக்குவரத்தின் தொடர்பில் இருநாட்டுக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பு குறித்த பத்திரங்களும் வெளியிடப்பட்டன.

சிலேத்தார் விமான நிலையத்தின் நடைமுறைகள், ஆகாயவெளி விவகாரங்கள் ஆகியவை குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து போக்குவரத்து அமைச்சு அந்தப் பத்திரங்களை வெளியிட்டது.

சிலேத்தார் விமான நிலையத்தின் சமிக்ஞை நடைமுறைகள் குறித்து சிங்கப்பூர்த் தரப்பு அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கு மலேசிய ஆணையம் பதிலளிக்கவில்லை என்று பத்திரங்கள் காட்டுகின்றன.

அதைத் தவிர அனைத்துலகப் பொது விமானப் போக்குவரத்து நிகழ்ச்சி ஒன்றின்போது மலேசிய ஆணையத்துடன் சிங்கப்பூர் தொடர்புகொண்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி இருதரப்பும் சிங்கப்பூரில் சந்தித்தன.

அப்பொழுது மலேசிய ஆணையம் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டதாக சிங்கப்பூர் ஆணையம் தெரிவித்தது.


 

Top