Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கரேனா யங் லயன்ஸ் பயிற்றுவிப்பாளர்: பொறுப்பிலிருந்து விலகுகிறார்

எஸ் லீக்கின் கரேனா யங் லயன்ஸ் காற்பந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் செல்வராஜ் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

எஸ் லீக்கின் கரேனா யங் லயன்ஸ் காற்பந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் செல்வராஜ் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகளுக்கு முன்பாக அவரின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரு செல்வராஜ் குடும்பச் சூழல் காரணமாகப் பொறுப்பில் இருந்து விலகுவதாக, சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் கூறியது.

22 வயதுக்கும் குறைவான விளையாட்டாளர்களைக் கொண்ட யங் லயன்ஸ் அணிக்குச் சுமார் 6 மாதங்களாக திரு செல்வராஜ், பயிற்றுவிப்பாளராக இருந்து வந்தார்.

அவரை அடுத்து, அந்த அணியை, தென்கிழக்காசிய விளையாட்டு போட்டி-வரை, தேசிய இளையர் குழுக்களுக்கான தலைமை பயிற்றுவிப்பாளர் ரிச்சர்ட் டார்டி வழிநடத்துவார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்