Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் உள்ளூர் இந்திய நிறுவனங்கள்: 'அவசர காலங்களில் உள்ளூர் உற்பத்தியே கைகொடுக்கும்'(பாகம் 1)

பல நாடுகள்  COVID-19 கிருமிப் பரவல் சூழலால்  முடங்கியுள்ளன. 

வாசிப்புநேரம் -

பல நாடுகள் COVID-19 கிருமிப் பரவல் சூழலால் முடங்கியுள்ளன.

சிங்கப்பூருக்கு வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய உணவுப் பொருள்கள் வந்து சேரவில்லை.

சில உணவுப் பொருள்களின் விநியோகம் தடைபட்டது. சில பொருள்கள் தாமதமாக வந்துசேருகின்றன.

மழை "பெய்து கெடுக்கும்" இல்லாவிட்டால் கடும் வெப்பம் "காய்ந்து கெடுக்கும்" என்ற நிலை, உலகம் முழுவதும் வரக்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உள்ளூரிலேயே உணவை உற்பத்தி செய்வதற்கான முக்கியத்துவத்தை நன்கு உணர்த்தியுள்ளது தற்போதைய சூழல்.

விநியோகம் தடைபடாமல் இருக்க, நமது உணவுப்பொருள்கள் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

அண்மைக் காலமாக அந்த முயற்சி இன்னும் தீவிரமடைந்திருக்கிறது.

உணவுப் பொருள்களில் மேலும் தன்னிறைவை எட்டுவது குறித்து சிங்கப்பூரில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்கள் சிலவற்றிடம் விவரங்களை அறிந்துவந்தது 'செய்தி'.


தானியக்க முறையின்மூலம் உற்பத்தியை மும்மடங்கு உயர்த்தமுடியும். தானியக்க முறைக்கு மாறும்போது

ஊழியர்களுக்கு அதற்குரிய பயற்சிகளை வழங்குவது அவசியம்.


இருப்பினும் அவசரக் காலங்களில் உள்ளூர் உற்பத்தியே கைகொடுக்கும் என்பதை இந்த இக்கட்டான சூழலில் சிங்கப்பூர்வாசிகள் உணர்ந்துள்ளதாகத் திரு. வீரமணி குறிப்பிட்டார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்