Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செம்பவாங் ஒருங்கிணைந்த நிலையத்தின் பெயர் அறிமுகம்

செம்பவாங்கில், பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிலையம், புக்கிட் கான்பெரா என அழைக்கப்படவிருக்கிறது.  

வாசிப்புநேரம் -
செம்பவாங் ஒருங்கிணைந்த நிலையத்தின் பெயர் அறிமுகம்

படம்: Sport Singapore

செம்பவாங்கில், பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிலையம், புக்கிட் கான்பெரா என அழைக்கப்படவிருக்கிறது. 

இன்று நடைபெற்ற நிலந்திருத்தும் நிகழ்வில் Sport Singapore அதனைத் தெரிவித்தது. கட்டங்கட்டமாக அந்த நிலையம் 2020ஆம் ஆண்டிலிருந்து திறக்கப்படவுள்ளது.

12 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் நிலையத்தில் பலதரப்பட்ட வசதிகள் இருக்கும். உணவங்காடி நிலையம், விளையாட்டு வசதிகள், பலதுறை மருந்தகம், மூத்தோர் பாரமரிப்பு நிலையம், சமூகத் தோட்டங்களுக்கான இடவசதி ஆகியவை அதில் இடம்பெற்றிருக்கும்.

ActiveSG-யின் ஆகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம் அங்கே அமைந்திருக்கும். திறந்தவெளி நீச்சல் குளத்தோடு கூரையுடன் கூடிய நீச்சல் குள வசதியும் அங்கு இருக்கும்.

செம்பவாங் பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 நிமிடங்களில் ஒருங்கிணைந்த நிலையத்தை அடைந்துவிடலாம்.

வருகையாளர்கள் வட்டாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள மரபுடைமைப் பலகைகள் நிறுவப்படும்.

புக்கிட் கான்பெரா வட்டாரத்தைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் விவரங்கள் அதில் இருக்கும்.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிலையம் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்