Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செங்காங் நகர மன்றத்தில் சேவை, பராமரிப்புக் கட்டணத்தை, ரொக்கமாகப் பெறும் சேவையில் தடை

செங்காங் நகர மன்றத்தில் சேவை, பராமரிப்புக் கட்டணத்தை, ரொக்கமாகப் பெறும் சேவையில் தடை

வாசிப்புநேரம் -
செங்காங் நகர மன்றத்தில் சேவை, பராமரிப்புக் கட்டணத்தை, ரொக்கமாகப் பெறும் சேவையில் தடை

(படம்: Facebook/Sengkang Town Council)

சேவை, பராமரிப்புக் கட்டணத்தை, ரொக்கமாகப் பெறும் சேவை தற்போது தன்னுடைய அலுவலகங்களில் தடைபட்டிருப்பதாக செங்காங் நகர மன்றம் தெரிவித்துள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு அதற்குக் காரணம். செங்காங் குழுத்தொகுதி நகரமன்ற நிர்வாகத்துக்கு, நேற்றுமுதல் பாட்டாளிக் கட்சி பொறுப்பேற்றுக்கொண்டது.

புவாங்கோக் (Buangkok), காம்பஸ்வேல் (Compassvale), ரிவர்வேல் (Rivervale), ஆங்கர்வேல் (Anchorvale) ஆகிய குடியிருப்புப் பேட்டைகள் செங்காங் குழுத்தொகுதியில் அடங்கும்.

சேவைகள் தடையின்றித் தொடர, தற்போது நடப்பில் இருக்கும் நகர மன்ற நிர்வாக அமைப்பை நிர்வகிக்கும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் முன்கூட்டியே அணுக்கமாய்ச் செயல்பட்டு வந்ததாக, செங்காங் நகர மன்றம் அதன் Facebookஇல் குறிப்பிட்டது.

ரொக்கப் பணத்தைப் பெறும் சேவை சீர்செய்யப்பட்டதும், குடியிருப்பாளர்களுக்குத் தகவல் வழங்கப்படும் என நகர மன்றம் தெரிவித்தது.

குடியிருப்பாளர்களுக்கு நேர்ந்துள்ள வசதிக்குறைவுக்காக அது, மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்