Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூத்தோரைப் பராமரிப்போருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கத் திட்டங்களை வகுத்துள்ள சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு மூத்தோரைப் பராமரிப்போருக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.

வாசிப்புநேரம் -
மூத்தோரைப் பராமரிப்போருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கத் திட்டங்களை வகுத்துள்ள சுகாதார அமைச்சு

(கோப்புப் படம்: Francine Lim)

சுகாதார அமைச்சு மூத்தோரைப் பராமரிப்போருக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.

4 முக்கிய அம்சங்களில் அந்த ஆதரவு வழங்கப்படவிருக்கிறது.

வேலை செய்யும் பராமரிப்பாளர்களுக்கு நீக்குப்போக்கான வேலை நேரத்தை அமைத்துத் தருவது; வீட்டிலும் சமூகத்திலும் வழங்கப்படும் பராமரிப்புக்குக் கூடுதல் மானியங்கள் அளிப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.

அதன் தொடர்பில் மனிதவள அமைச்சுடன், சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது.

பராமரிப்பாளர்களுக்குத் தற்காலிக ஓய்வு அளிக்கவும் திட்டமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தற்போது முதியோர் பராமரிப்புக்கான வளங்களையும் ஆதரவையும் பெறுவதில் பராமரிப்பாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் அது தெரிய வந்தது.

பராமரிப்பாளர்கள், சேவை வழங்குநர்கள் என அவற்றில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்