Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடும்பத்தார் ஐயங்களைப் போக்கினால், மூத்தோர் தடுப்பூசி போட முன்வரலாம்: வசிப்போர் குழு உறுப்பினர்கள்

மூத்தோரிடையே, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இன்னும் சற்று குறைவாக உள்ளது. இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தோரும் இதில் அடங்குவர்.

வாசிப்புநேரம் -

மூத்தோரிடையே, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இன்னும் சற்று குறைவாக உள்ளது. இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தோரும் இதில் அடங்குவர்.

அவர்களின் ஐயங்களைப் போக்கக் கூடுதல் முயற்சி எடுத்தால், மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட முன்வரலாம் என வசிப்போர் குழுக்களைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

மூத்தோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் இயக்கத்தில் பணிபுரிந்த, வசிப்போர் குழுக்களைச் சேர்ந்த சிலருடன் பேசியது, 'செய்தி'.

குழப்பம்

மூத்தோர் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதா, வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக ஜூரோங் கிரீன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் துணைத் தலைவர் திருவாட்டி. சந்திரகலா சொன்னார்.

அதற்கு முக்கிய காரணம், பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறும் முரணான தகவல்கள்.

 எது உண்மை, எது பொய் என்று அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை.

என்றார் அவர்.

மூத்தோரிடம் சொல்வது:

அதிகாரத்துவத் தகவல்களை மட்டுமே நாடுங்கள்.

சில தளங்கள்: 

தடுப்பூசி குறித்த அச்சம்

  • வயது

மூத்தோர் பலருக்கு, 'வயது' என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

'எனக்குத் தான் வயதாகிவிட்டதே. எதற்குத் தடுப்பூசி..ஏதாவது நடந்தால்..என்ன செய்வது?' என்ற கேள்வியைப் பலர் எழுப்புவதாகக் கோலம் ஆயர் சிம்ஸ் விஸ்டா (Kolam Ayer Sims Vista) வசிப்போர் குழுவின் துணைத்தலைவர், திரு. அ. முஹம்மது பிலால் சொன்னார்.

மூத்தோரிடம் சொல்வது:

வயதானாலும், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கத் தடுப்பூசி அவசியம்.

  • குடும்பத்தார் மீதான அக்கறை

தடுப்பூசி போட்டுக்கொண்டு ஏதாவது நடந்தால், குடும்பத்தார் தம்மை பார்த்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிலர் அஞ்சுகின்றனர் என்றும் திரு. பிலால் குறிப்பிட்டார்.

மூத்தோரிடம் சொல்வது:

தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் நோய்த்தொற்றுக்கு ஆளானால், அதனால் ஏற்படும் சிரமங்கள் அதிகம்.

  • பக்கவிளைவு குறித்த குழப்பம்

மூத்தோர் சிலர், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் பக்கவிளைவு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகள் என்று தவறாக எண்ணுகின்றனர்.

மூத்தோரிடம் சொல்வது:

பெரும்பாலும் ஏற்படக்கூடிய காய்ச்சல், வலி போன்ற சாதாரணமான பக்கவிளைவுகள் 3 நாள்களுக்குள் சரியாகிவிடும்.

அரிய சம்பவங்களில், ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

நாள்பட்ட நோய் இருந்தால் போடமுடியுமா?

(படம்:Reuters)

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்குத் தடுப்பூசி போடத் தயக்கம் இருப்பதாகத் திருவாட்டி.சந்திரகலா சொன்னார்.

மூத்தோரிடம் சொல்வது:

நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள், கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அவசியம் எழலாம்.

அதனால், கண்டிப்பாகத் தடுப்பூசி போடவேண்டும். சந்தேகமோ கேள்வியோ இருந்தால், மருத்துவரை நாடலாம்.

'குடும்பத்தார் ஐயங்களைப் போக்கவேண்டும்'

மூத்தோர், தடுப்பூசி போட்டுகொள்ள முன்வருவதில் குடும்பத்தாருக்கு முக்கிய பங்குண்டு. குடும்பத்தார் அவர்களின் ஐயங்களைப் போக்கவேண்டும்.

தாங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, வீட்டில் உள்ள மூத்தோரையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தால், அது நிச்சயமாக உதவும் என்று 'செய்தி'-இடம் பேசிய இருவரும் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்