Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாதிமை இல்லங்களில் உள்ள மூத்தோருக்கு இன்று முதல் booster shots எனும் கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும்

தாதிமை இல்லங்களில் உள்ள மூத்தோருக்கு இன்று முதல் COVID-19 booster shots எனும் கூடுதல் தடுப்பூசி போடப்படுகிறது.

வாசிப்புநேரம் -

தாதிமை இல்லங்களில் உள்ள மூத்தோருக்கு இன்று முதல் COVID-19 booster shots எனும் கூடுதல் தடுப்பூசி போடப்படுகிறது.

சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) Facebook-இல் அது பற்றிப் பதிவிட்டுள்ளார்.

booster shots எனும் கூடுதல் தடுப்பூசி போடப் பதிந்துகொள்ள மூத்தோர் சுமார் 140,000 பேருக்கு அடுத்த சில நாளில் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூத்தோருக்கு குறுந்தகவல் வழி அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

வீட்டிற்கு சென்று தடுப்பூசி போடும் குழுவும், நடமாடும் தடுப்பூசி போடும் குழுவும் தயாராக உள்ளதாகத் திரு. ஓங் கூறினார்.

வீட்டிலிருந்து வெளியேறமுடியாத மூத்தோருக்கு தடுப்பூசி போடும் பணியில் குழுக்கள், ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கக் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இம்மாத இறுதிக்குள் இரண்டு புதிய சமூகப் பராமரிப்பு வசதிகள் திறக்கப்படுமென திரு. ஓங் சொன்னார்.

தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திலும் மருத்துவமனைகளிலும் உள்ள தனிமைப்படுத்தும் பிரிவில் கூடுதலாக 300 படுக்கைகள் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.


- CNA/ad(ac) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்