Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு சமூக ஒன்றுகூடல்களைக் குறைத்துக்கொள்க - மூத்தோருக்கு வேண்டுகோள்

மூத்தோர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அடுத்த இரண்டு வாரங்களுக்கு சமூக ஒன்றுகூடல்களைக் குறைத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

வாசிப்புநேரம் -

மூத்தோர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அடுத்த இரண்டு வாரங்களுக்கு சமூக ஒன்றுகூடல்களைக் குறைத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் சமூக அளவில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், AIC எனும் ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு அந்த வேண்டுகோளை முன்வைத்தது.

60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரையும் அவர்களுடன் வசிப்பவர்களையும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அது கேட்டுக்கொண்டது.

கிருமித்தொற்றுக்கு ஆளானால், மூத்தோர் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள நிலையில், அவர்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குடும்பத்தார், முத்தோருக்கு அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவலாம் என்று அமைப்பு தெரிவித்தது.

மூத்தோர் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மூத்தோரை வீட்டிலேயே இருக்க ஊக்குவிப்பதற்கு, அவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைப் புத்தகத்தை அது உருவாக்கியுள்ளது.

அதிலுள்ள கலை சார்ந்த நடவடிக்கைகளை மூத்தோர் தங்கள் பராமரிப்பாளர்கள், அன்புக்குரியவர்களின் உதவியோடு செய்யலாம்.

பழக்கப்பட்ட உணவு, இடங்கள் போன்றவை பற்றிய பழங்காலத்து நினைவுகளில் மூத்தோரைத் திளைக்க வைக்கும் வகையில் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்