Images
மூத்தோருக்கான தடுப்பூசித் திட்டம் இம்மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கும்
மூத்தோருக்கான தடுப்பூசித் திட்டம் இம்மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடுவதற்கான தேதி, நேரத்தை முன்பதிவு செய்வதன் தொடர்பில் அவர்களுக்குக் கட்டங்கட்டமாகக் கடிதங்கள் அனுப்பப்படும்.
சமூகப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்தோருக்கும் கட்டங்கட்டமாகத் தடுப்பூசி போடப்படும்.
தாதிமை இல்லத்தில் வசிப்போருக்கும், அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டது.
தடுப்பூசிகள் கட்டங்கட்டமாகப் போடப்படும் நேரத்தில் சிங்கப்பூரர்களும், நீண்டகாலக் குடியிருப்பாளர்களும் தங்களுக்குரிய காலம் வரும்போது, முன்வந்து தடுப்பூசி போட்டுகொள்ள அமைச்சு அறிவுறுத்தியது.