Images
  • sentosa cove
    (படம்: Sentosa Cove / Facebook)

வழக்குரைஞருக்கு 10,000 வெள்ளி அபராதம்

செந்தோசா கோவ்வில் சொத்து ஒன்றை வாங்க ஒரு சீனச் செல்வந்தர் முயற்சி செய்துள்ளார்.

அதன் தொடர்பில் 5 மில்லியன் வெள்ளிக்கு மேல் பரிவர்த்தனை நடந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய அந்தப் பரிவர்த்தனையை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறிய வழக்குரைஞர் காங் பீ லெங்கிற்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை சீனாவில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள Ponzi திட்டத்துடன் தொடர்புடையது என்று சந்தேகிக்கப்படுகிறது.

Sterling Law Corporation நிறுவனத்தைச் சேர்ந்த 56 வயது வழக்குரைஞர் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு 20,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.  

Top