Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை இலவசமாக செந்தோசாவில்

சிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை செந்தோசாவில் இலவசமாக அறிமுகம் காணவுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை இலவசமாக செந்தோசாவில்

(படம்: ST Engineering, Ministry of Transport, Sentosa Development Corporation)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை செந்தோசாவில் இலவசமாக அறிமுகம் காணவுள்ளது.


(படங்கள்: ST Engineering, Ministry of Transport, Sentosa Development Corporation)

அந்தச் சேவை இவ்வாண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதியிலிருந்து நவம்பர்
15-ஆம் வரை பொதுமக்களிடம் சோதனை அடிப்படையில் அறிமுகமாகிறது.

செந்தோசாவின் Ride Now செயலி மூலம் பேருந்தை நிறுத்தி ஏறிக்கொள்ளலாம்.

அதோடு பேருந்து செல்லும் 5.7 கிலோமீட்டர் நீளமான பாதையிலுள்ள நிறுத்தங்களிலும் பொதுமக்கள் காத்திருக்கலாம்.

பேருந்துச் சேவை வழி சிலோசோ பாயிண்ட், பீச் ஸ்டேஷன், பலவான் பீச், தஞ்சோங் பீச், செந்தோசா கோல்ஃப் கிளப் (Siloso Point, Beach Station, Palawan Beach, Tanjong Beach, Sentosa Golf Club) உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லலாம்.

பொது விடுமுறை தினங்களைத் தவிர்த்து மீத வார நாட்களில் காலை 10 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையும் மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரையும் சேவை இயங்கும்.

ST Engineering, போக்குவரத்து அமைச்சு, Sentosa Development Corporation ஆகியவை இணைந்து சேவையைத் தொடங்கியுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்