புதிய கேளிக்கை அனுபவங்களுடன் சோதனைத் தளமாக உருவாகும் Sentosa x Enterprise திட்டம்
புதிய கேளிக்கை அனுபவங்களை உருவாக்கவும் புத்தாக்கத் திட்டங்களைச் சோதனையிடவும் புதிய தளமாக அமையவுள்ளது Sentosa x Enterprise திட்டம்.
புதிய கேளிக்கை அனுபவங்களை உருவாக்கவும் புத்தாக்கத் திட்டங்களைச் சோதனையிடவும் புதிய தளமாக அமையவுள்ளது Sentosa x Enterprise திட்டம்.
இன்று (ஏப்ரல் 16) நடைபெற்ற சுற்றுப்புறத் துறை மாநாட்டில் பேசிய வர்த்தக, தொழில்துறைக்கான மூத்த துணை அமைச்சர் திரு சீ ஹொங் டாட் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
செந்தோசா மேம்பாட்டு நிறுவனத்தால் உருவக்கப்பட்ட திட்டத்தில் வர்த்தகங்களுக்குக் குறைந்த வாடகைக்கு இடங்களைக் கொடுப்பதுடன், உரிமம்,செயல்முறைகளுக்கான ஒப்புதல்களைப் பெறவும் நிறுவனம் ஆதரவு வழங்கும்.
சிங்கப்பூரைத் தவிர வேறெங்கும் கிடைக்காத அனுபவங்களை செந்தோசா தீவில் சிறப்பாக வழங்க புதிய திட்டம் வகைசெய்யும் என்று நம்பப்படுகிறது.
மேலும் சுற்றுப்பயணிகளை செந்தோசா தீவுக்கு ஈர்ப்பதே திட்டத்தின் நோக்கம் என்றார் திரு சீ.