Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிராங்கூன் ரோடு கத்திக்குத்துச் சம்பவம்: தடியால் தாக்கியதை ஆடவர் ஒப்புக்கொண்டார்

சிராங்கூன் ரோட்டில் கடந்த ஆண்டு நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 27 வயது ஆடவரைத் தடியால் தாக்கிய குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிராங்கூன் ரோடு கத்திக்குத்துச் சம்பவம்: தடியால் தாக்கியதை ஆடவர் ஒப்புக்கொண்டார்

(படம்: Facebook/KP Lau)

சிராங்கூன் ரோட்டில் கடந்த ஆண்டு நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 27 வயது ஆடவரைத் தடியால் தாக்கிய குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

குழுவாகச் சேர்ந்து தாக்கியதில் அந்த 27 வயது ஆடவருக்குப் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. அவருடைய பாதத்தின் ஒரு பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்படும் நிலையும் ஏற்பட்டது.

குழுவில் ஒருவரான 18 வயது ஷர்வின் ராஜ் சுராஜ் ஆயுதம் ஏந்திக் கலவரத்தில் ஈடுபட்டது, ஆயுதம் வைத்திருந்தது, குண்டர் கும்பலில் உறுப்பினராக இருந்தது ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷர்வினுக்குத் தண்டனை விதிக்க அவர் மீதான மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்திற்கொள்ளப்படும்.

ஜனவரியிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷர்வினும் மேலும் நான்கு பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 25 அன்று தாக்குதலை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட நபருடன் இருந்த பகைமை காரணமாக அதற்குப் பழிதீர்க்க அவர்கள் அவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.

சம்பவத்தின் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் நபர் ஷர்வின்.

ஜூலை 5ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்