Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

DBS-இன் மின்னிலக்கச் சேவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கும் தடைக்குக் காரணம்..

DBS-இன் மின்னிலக்கச் சேவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கும் தடைக்குப் பயனீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் கணினி ஆணைத்தொடரில் (access control server) ஏற்பட்ட கோளாறே காரணம் என்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

வாடிக்கையாளர்கள் பலர் மின்னிலக்கக் கணக்கைப் பயன்படுத்த இயலவில்லை என்று DBS சொன்னது.

கோளாற்றைச் சரி செய்ய, மூன்றாம் தரப்புப் பொறியாளர்கள் அயராது பணியாற்றி வருவதாக அது கூறியது.

முன்னதாக, நேற்று ஏற்பட்ட இடையூறு சீர்செய்யப்பட்டது.

என்றாலும் இன்றும் கோளாறு தொடர்கிறது.

வாடிக்கையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்ட DBS வங்கி சிரமத்துக்கு மன்னிப்புக் கோரியது.

எனவே, அனைத்து DBS, POSB வங்கிக் கிளைகளிலும் இன்று (24 நவம்பர்) சேவைகள் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டன.

உதவி தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்குச் செல்லலாம் அல்லது தொலைபேசி வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்