Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Eat Real Puff உணவு பொருள்கள் சிலவற்றைக் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ள உத்தரவு

Eat Real Puff உணவு பொருள்கள் சிலவற்றைக் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளுமாறு, 2 இறக்குமதி நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

Eat Real Puff உணவு பொருள்கள் சிலவற்றைக் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளுமாறு, 2 இறக்குமதி நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

அந்த உணவுகளில் ஒவ்வாமை ஏற்படுத்தும் அறிவிக்கப்படாத பால் பொருள்கள் இருப்பதால், அவற்றை மீட்டுக்கொள்ளுமாறு பிரிட்டனின் உணவு தர அமைப்பு (United Kingdom Food Standards Agency) உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, இங்கும் அத்தகயை நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிங்கப்பூர்
உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பொருள்கள்:

  • Eat Real Quinoa Puffs (Mediterranean Flavour) (40g, 113g)
  • Eat Real Quinoa & Kale Puffs (White Cheddar Flavour) (40g, 113g)
  • Eat Real Quinoa Puffs (Jalapeno & Cheddar Flavour) (40g, 113g)

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்த Karstel Marketing, Richoco நிறுவனங்கள் அவற்றை மீட்டுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

பால் பொருள் ஒவ்வாமை உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பொருள்களைச் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்