Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவல் விகிதத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது: நிபுணர்கள்

கிருமிப்பரவல் விகிதத்தைவிட, கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையே COVID-19 நிலவரத்தை எடுத்துரைக்கும் முக்கிய அம்சம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவல் விகிதத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது: நிபுணர்கள்

(படம்: Facebook/Tan Tock Seng Hospital)

கிருமிப்பரவல் விகிதத்தைவிட, கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையே COVID-19 நிலவரத்தை எடுத்துரைக்கும் முக்கிய அம்சம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாராந்திரக் கிருமிப்பரவல் விகிதம், குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து 1க்குக் குறைவாக இருந்தால், கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவதாக அர்த்தம் என்றார் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் நோய்த்தொற்று நிபுணர் டாக்டர் அலெக்ஸ் குக் (Alex Cook).

ஆனால், அது தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணிகள் மெதுவடைவதால்கூட ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவதே முக்கியம் என்றார் டாக்டர் குக்.

அதனால், கிருமிப்பரவல் விகிதம் குறைவதன் அடிப்படையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

வாராந்திரக் கிருமித்தொற்று விகிதம் 1க்கும் கீழ் குறைந்தால், மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத்தலைவர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) முன்னதாகக் கூறியிருந்தார்.

சிங்கப்பூரின் தற்போதைய வாராந்திரக் கிருமித்தொற்று விகிதம் 1.15.

-CNA/ja

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்