Images
  • gavel

கடைக்கு வந்த பதின்ம வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்ற ஆடவருக்குச் சிறை

பதின்ம வயது பெண்ணிடம் பாலியல் தொடர்பான காணொளிகளையும், படங்களையும் பெற்றுக்கொண்டு இரண்டுமுறை பலாத்காரம் செய்ய முயன்ற இந்திய ஆடவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

புளோக் 176 பூன் லே டிரைவிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்த இந்திய ஆடவர் 31 வயது உதயகுமார் தக்க்ஷிணாமூர்த்தி.

தாம் வேலை பார்த்த கடைக்கு வந்த 12 வயதுப் பெண்ணை அவர் பாலியல் ரீதியில் சீண்டியுள்ளார்.

பதின்ம வயதுப் பெண்ணிடம் சிம் அட்டை கொடுத்து அவரின் பாலியல் தொடர்பான காணொளிகளையும், படங்களையும் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தின்பண்டங்களை இலவசமாக கொடுத்துள்ளார் அந்த ஆடவர்.

கிட்டத்தட்ட 10 மாதங்களாக சிறுமியைப் பாலியல் ரீதியாகச் சீண்டிய உதயகுமாரின் செயல்களைக் கண்ட அவருடைய காதலி 2017 ஆம் ஆண்டு காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

பதின்ம வயதினரிடம் பாலியல் தொடர்பான செயல்கள் செய்த குற்றத்தின் அடிப்படையில் உதயகுமார் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
 

Top