Images
  • sg

பயங்கரவாத மிரட்டல்களை எதிர்கொள்ள "சமய அமைப்புகளுக்கான நெருக்கடி கால ஆயத்தத் திட்டம்" அறிமுகம்

சிங்கப்பூரிலுள்ள சமய அமைப்புகள் பயங்கரவாத மிரட்டல்களை கையாளும் திறனை மேம்படுத்த "சமய அமைப்புகளுக்கான நெருக்கடி கால ஆயத்தத் திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலாசார, சமூக, இளையர் அமைச்சும், SG - Secure சமூகக் கட்டமைப்பும் இணைந்து அந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

பயங்கரவாத மிரட்டல்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், நெருக்கடியைச் சமாளிக்கும் மனநிலையை ஏற்படுத்துதல் போன்ற அம்சங்களில் சமய அமைப்புகளைத் தயார் செய்ய அந்தத் திட்டம் உதவும்.

200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்ட பயங்கரவாத முறியடிப்புக் கருத்தரங்கில், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று உரையாற்றினார்.

உலக அளவில் தீவிரவாதிகள் சமய அமைப்புகளை எளிதாகக் குறிவைத்து வலியையும் சேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் பல்வேறு சமயங்களுக்கிடையே வெறுப்பையும் விரோதத்தையும் விதைக்கும் என்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ குறிப்பிட்டார்.
 

Top